search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிப்பர் லாரி சிக்கியது"

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. குழாய் பதித்த குழியில் டிப்பர் லாரி சிக்கியதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மத்திய அரசின் அம்ருதிட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதையொட்டி பல இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகளில் வாகனங்கள் சிக்கி வருகின்றன. கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரி குடிநீர் குழாய்க்கு தோண்டிய குழியில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணத்தில் நேற்று மாலை சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் குடிநீர்குழாய் பாதிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அந்த வழியாக இன்று காலை ஜல்லி ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியின் 2 டயர்கள் சேற்றில் சிக்கி புதைந்ததால் லாரி நடு ரோட்டில் நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளில் படிக்குமு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் நடந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×